×

பிளஸ் 1 தேர்வுக்கு ஹால்டிக்கெட்: இன்று முதல் வினியோகம்

சென்னை: மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ் 1 தேர்வுக்கு சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இன்று பிற்பகல்  ஹால்டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் பிளஸ் 1 பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்து தற்போது  தனித்தேர்வர்களாக தேர்வு எழுத சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்துள்ளவர்கள் (தட்கல் உள்பட) இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற  இணைய தளத்தில் இருந்து தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட இணைய தளத்தில் நுழைந்து, Hall Ticket Download என்ற வாசகத்தை ‘கிளிக்’ செய்தால், HIgher Secondary FirstYear March  2019- Private Candidate - Hall Ticket Printout என்ற வாசகத்தை  கிளிக் செய்து, அதில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை  பதிவு செய்ய வேண்டும். அப்போது ஹால்டிக்கெட் திரையில் தோன்றும். பின்னர் அதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : supplier , Plus 1 choice, the holistic
× RELATED கோவை மாவட்டம் சூலூரில் சிலிண்டர்...