×

ஆளுநர் அலுவலக தர்ணா போல பிரதமர் வீட்டிலும் போராட தயார் - கெஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி: ஆளுநர் இல்லத்தில் தர்ணா நடத்தியது போல, அவசியம் அமையும் என்றால் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்திலும் போராட்டம் நடத்த தயங்க மாட்டேன் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டெல்லி வக்கீல் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெஜ்ரிவால் ஆற்றிய உரை:நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மிகவும் முக்கியமானது மட்டுமன்றி சுவாரசியமானதும் ஆகும். டெல்லி தொகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் மத்திய ஆட்சியை யார் பிடிப்பார்கள் என தீர்மானிக்க முடியும். 7 தொகுதியும் ஆம் ஆத்மி கைப்பற்றினால், டெல்லிக்கு முழு அந்தஸ்து கண்டிப்பாக கிடைப்பது உறுதி.

சட்டப்பேரவையில் 67 எம்எல்ஏக்களுடன் அமோக மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி கட்சி உள்ளது. ஆனால், வெறும் 3 எம்எல்ஏக்களை கொண்ட பாஜவிடம் தான் அதிகாரம் ஒட்டு மொத்தமாக குவிந்துள்ளது. அரசு ஊழியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என நான் நினைத்தாலும், அது என்னால் முடியாத காரியமாகி உள்ளது.டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, அதிகாரிகள் பணியிட மாற்றங்களை அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித்தால் எளிதில் மேற்கொள்ள முடிந்தது. எனது தலைமையிலான ஆட்சி அமைந்ததும், அந்த அதிகாரம் பறிக்கப்பட்டு எனது கைகள் கட்டப்பட்டது.தலைநகரில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்துக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, ஆளுநர் அனில் பைஜால் அலுவலக வரவேற்பு அறையில் 9 நாள் தர்ணா போராட்டம் நடத்தினோம். அதுபோல டெல்லிக்கு முழு அந்தஸ்து பெறுவதற்காக அவசியம் எழுந்தால், பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிலும் தர்ணா போராட்டத்தை நடத்து தயாராகவே உள்ளேன்.மாநிலத்துக்கு முழு அந்தஸ்து கிடைக்கும் என டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மோடி காப்பாற்றுவார் என கருதுகிறேன். முழு அந்தஸ்து பிரச்னையில் உரிய நீதி கிடைக்காமல் 70 ஆண்டுகளாக டெல்லி மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லிக்கு ஏன் முழு அந்தஸ்து வழங்காமல் உள்ளனர்? டெல்லிவாசிகள் தேசப்பற்று இல்லாதவர்களா? அல்லது நாம் அரசுக்கு வரி செலுத்தவில்லையா?உங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று, சமூக பாதுகாப்பு திட்டத்தில் டெல்லி வக்கீல் சங்கத்திற்கு ₹50 கோடி ஒதுக்கி வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என இந்த வேளையில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த உங்களது கோரிக்கையை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றி உள்ளது.
இவ்வாறு ஜெஜ்ரிவால் உரையாற்றி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : governor ,Darna - Kejriwal ,house , Darna, Prime Minister Narendra Modi, Kejriwal obsession
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...