×

புல்வாமா தாக்குதல் எதிரொலி உலக கோப்பையில் பாகிஸ்தானை வெளியேற்ற பிசிசிஐ வலியுறுத்த முடிவு

புதுடெல்லி: புல்வாமா தாக்குதல் எதிரொலி காரணமாக  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் பிசிசிஐயும் அதே முடிவை எடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான எதிரான மனநிலை இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதன் ஒருப் பகுதியாக  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்றும், உலக கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்றும் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் உலக கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய ஏற்கனவே ஐசிசி மறுத்து விட்டது.உலக கோப்பை  போட்டியில் ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ள லீக் போட்டியில் இந்தியாவும்  பாகிஸ்தானும் மோத உள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியமும்(பிசிசிஐ),  ‘பாகிஸ்தானை உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும்’ என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ஐசிசி) வலியுறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கேட்டுள்ளனர்.

இது குறித்து  நிர்வாகிகள் குழுத் தலைவர் வினோத் ராய்,  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் ராகுல் ஜோரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அது குறித்து வினோத்ராயும், ‘இந்தியாவின் எண்ணத்துக்கு எதிராக பாகிஸ்தானுடன் போட்டிகள் நடத்தும் திட்டம் ஏதுமில்லை’ என்று தெரிவித்துள்ளார். மேலும் பிப்.27ம் தேதி துபாயில் தொடங்கும் ஐசிசி கூட்டத்தில் வினோத் ராய் பங்கேற்க  உள்ளார். அந்த கூட்டத்தில் பிசிசிஐ தரப்பில் என்ன வலியுறுத்துவது என்பது குறித்து இன்று  வெள்ளிக்கிழமை விவாதிக்க நிர்வாகிகள் குழு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடமல் புறக்கணிப்பது சரிதான். ஆனால் அரையிறுதிப் போட்டியிலோ அல்லது இறுதிப்ேபாட்டியிலோ பாகிஸ்தானுடன் மோத நேர்ந்தால் என்ன முடிவு எடுப்பது’ என்றும் பலரும் கேட்டு வருகின்றனர்.

ஏன் விளையாடக் கூடாது?
முகம்மது அசாருதீன்(முன்னாள் கேப்டன்):  நாட்டை விட உலக கோப்பை முக்கியமானதல்ல. உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது. சவுரவ் கங்குலி(முன்னாள் கேப்டன்): உலக கோப்பையில் பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும். ஹர்பஜன் சிங்(கிரிக்கெட் வீரர்): உலக கோப்பையில்  பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது. பாகிஸ்தானுடன் விளையாடமலே உலக கோப்பை வெல்லும் வலுவான அணியாக இந்தியா இருக்கிறது. ரவிசங்கர் பிரசாத்(மத்திய அமைச்சர்): சூழ்நிலை இயல்பாக இல்லை. பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் தொடர்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். சேத்தன் சவுகான்(முன்னாள் வீரர், உபி அமைச்சர்):  உலக கோப்பையில் இருந்து பாகிஸ்தானை தூக்கி எறிவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அழுத்தம் தர வேண்டும். சுனில் கவாஸ்கர்(முன்னாள் கேப்டன்): நாடு என்ன முடிவு  எடுக்கிறதோ, அதனைதான் ஆதரிப்பேன். உலக  கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடாமல் புறக்கணிப்பதின் மூலம் அவர்களை  காயப்படுத்த முடியும். ஆனால் அவர்களுக்கு 2 புள்ளிகள் தர வேண்டியிருக்கும்.  அதனால் பாகிஸ்தானுடன் விளையாடி அவர்களை  வீழ்த்த வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attack ,Pulwama ,BCCI ,Pakistan ,World Cup , The Pulwama attack, the World Cup, the Pakistani exit, the BCCI
× RELATED காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப்...