×

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை நடந்த தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு கடந்த 10ந்தேதி மாசிதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. நேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடந்தது. இன்று அதிகாலை தெப்ப உற்சவம் நடைபெற்றது.

அதற்காக நேற்று மாலை பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, இரவு புஷ்ப விமானத்தில் சுவாமி வீதியுலா வந்து புதுப்பேட்டையில் அமைந்துள்ள அம்மன் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.   இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பி பஞ்சமூர்த்திகளை வணங்கினார்கள். 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் விருத்தாசலம் ஏஎஸ்பி தீபாசத்தியன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து 12ம் நாளான இன்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன், மாசிமக திருவிழா நிறைவடைகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vratasalam Vriddhagirishwarar Temple ,devotees , Vriddhachalam, Vriddhacharyeshwara, terraced festival,devotees worship
× RELATED பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி