×

மடப்புரம்விலக்கு கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா: கரு.கருப்பையா தலைமையில் நாளை நடக்கிறது

மதுரை: திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம்விலக்கு விசாலாட்சி விநாயகர் கோயிலில் கரு.கருப்பையா தலைமையில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரையில் உள்ளது மடப்புரம்விலக்கு. இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் பிரசித்தி பெற்ற தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில் உள்ளது.

இந்த கோயிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நாளை சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு மாலை 5.30 மணிக்கு கோயில் நிர்வாகியும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடக்கிறது.பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள். ஆனால் இந்த கோயிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி, 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதன் மூலம் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும். இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sankatahara Chaturthi ,ceremony ,Madaraviruvai temple ,Karu Kappayai , Mulappuruvil temple, Sankatahara Chaturthi ,Karu Kappayai ,tomorrow
× RELATED அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா