×

கூகூர்- கிளிக்கூடு இடையே கொள்ளிடத்தின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படுமா?

* வியாபாரிகள், விவசாயிகள் எதிர்பார்ப்பு


லால்குடி :  லால்குடி பகுதி வியாபாரிகளும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் கூகூர் - கிளிக்கூடு இடையே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க் வேண்டுமென தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகாவில் லால்குடி, அன்பில், வாளாடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, பெருவளப்பூர் வருவாய் பகுதிகளுக்கு உட்பட்ட 92 கிராமங்கள் முற்றிலும் விவசாயம் சார்ந்த கிராமப் பகுதிகளாகும், வாழை, கரும்பு, நெல், சோளம், பருத்தி, உளுந்து, எள், தினசரி பயன்பாட்டிற்கு விளைவிக்கும் காய்கறிகள் போன்ற வருவாய் தரக்கூடிய பயிர்களே இங்கு பயிரிப்பட்டு வருகிறது.

காய்கறி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் திருச்சி சென்று சந்தையில் விற்பனை செய்வதற்கும், லால்குடியில் இருந்து ரங்கம், திருச்சி, மணப்பாறை, கரூர், தஞ்சாவூர் போன்ற நகரங்களுக்கு வாகனங்களில் ஏற்றி சென்று சந்தையில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு விளை பொருட்களை வாகனங்களில் சந்தைக்கு கொண்டு செல்வதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள வாளாடி, சமயபுரம் டோல்கேட் வழியாக சென்று வருவதால் மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதுடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் சந்தைக்கு சென்று விற்பனை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் மிகுந்த மன உளைச்சலையும், வருவாய் நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றனர்.


மேலும் லால்குடி பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் இங்கிருந்து திருச்சி சென்றுதான் தங்களது மேல்படிப்பை படிக்க வேண்டி உள்ளது. தற்போது கல்லூரிகளில் காலை, மாலை (காலை மற்றும் மாலை நேர கல்லூரி) என்ற முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொலைவு காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் கல்லூரிகளில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.   லால்குடியை அடுத்த கூகூர் - கிளிக்கூடு இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டினால்  இதன்மூலம் கல்லணை வழியாக தஞ்சாவூர் செல்லவும், திருவெறும்பூர்  வழியாக புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லவும், விவசாயிகள், வணிகர்கள் திருச்சியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மார்க்கெட் செல்லவும் ஏதுவாக இருக்கும்.

விவசாயிகள், வணிக வியாபாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் திருச்சி ஒருங்கிணைந்த மார்கெட் செல்ல சுமார் 5 கி.மீ செல்லும்  காலநேரம், எரிபொருள் சேமிக்கப்படுவதால் விவசாயிகளும் வணிக வியாபாரிகளும்  தங்களது  வருவாயை அதிகப்படுத்த கூடும். கல்லூரி மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் கல்லூரிக்கு சென்று தங்கள் மேல்படிப்பை படிக்க ஏதூவாக இருக்கும்.

எனவே தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் கூகூர் - கிளிக்கூடு இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bridge ,gorge ,Gogur , new bridge,kilikudu,Gogur,lalkudi
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!