×

2வது கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு மே.வங்கத்தில் 80.43%, அசாமில் 73 சதவீதம்: ஆர்வத்துடன் வாக்களித்தனர் மக்கள்

நந்திகிராம்: மேற்கு வங்கம், அசாமில் நேற்று 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்தனர். மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கத்தில் காலை 9 மணி வரை 16 சதவீதம் வாக்குகளும், 11 மணி வரை 37.4 சதவித வாக்குகளும் பதிவான நிலையில், மாலை 5 மணிக்கு மொத்தம் 80.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அசாமில் 10,592 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சானிடைசர் வழங்கப்பட்டது. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. பல மையங்களில் முதல் வாக்காளர்களுக்கு மரக்கன்று தந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவை மாற்றப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. அசாமில் காலை 9 மணி வரை 10.51 வாக்குகளும், 11 மணி வரை நிலவரப்படி 27.55 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 73.03 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது….

The post 2வது கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு மே.வங்கத்தில் 80.43%, அசாமில் 73 சதவீதம்: ஆர்வத்துடன் வாக்களித்தனர் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Bengal ,Assam ,Nandigram ,West Bengal ,
× RELATED செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு...