ஒருவருடன் லிவிங் டுகெதர், மற்றொருவருடன் நிச்சயதார்த்தம் மேலும் ஒரு வாலிபருடன் நடிகை அதிதி மேனன் கள்ளக்காதல்: நடிகர் அபி சரவணன் பகீர் குற்றச்சாட்டு

சென்னை: பட்டதாரி  என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி மேனன். அதே படத்தில் உடன்  நடித்த அபி சரவணன் என்பவரை காதலித்தார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக  இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துவிட்டதாக  போலி திருமண சான்றிதழ் மூலம் தன்னை மிரட்டி தொல்லை கொடுத்து வருவதாக அதிதி மேனன் போலீஸ்  கமிஷனரிடம் புகார் கூறினார். இதற்கு பதிலளித்து நடிகர் அபி சரவணன் நேற்று அளித்த  பேட்டி:எனக்கும் அதிதி மேனனுக்கும் 2016ல்  பட்டதாரி படத்தில் நடிக்கும்போது அறிமுகம் ஏற்பட்டது. அவர் நெடுநல்வாடை  என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் இயக்குனருக்கும்  அதிதிக்கும் பிரச்னையானது.


அதைத்தொடர்ந்து அந்த இயக்குனர் மீது பாலியல்  புகார் குற்றச்சாட்டு கூறியதுடன் மேலும் தற்கொலைக்கும் முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இதுபற்றி  தற்போது என் மீது அளித்துள்ள புகாரில் அதிதி மேனன் தெரிவிக்கவில்லை. அந்த  சமயத்தில் அவருக்கு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனக் கூறியதால்  மதுரையில் உள்ள  எனது வீட்டிற்கு அழைத்துச்சென்று என் பெற்றோரிடம்  அறிமுகப்படுத்தி எனது வீட்டிலேயே பாதுகாப்பு அளித்தேன். 2016 ஜூன் 9ம் தேதி மதுரையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். சென்னையில் தனியாக வீடு எடுத்து மூன்று வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அந்த வீட்டின்  ஒப்பந்தப் பத்திரத்தில் ஆதிரா சந்தோஷ் (அதிதி மேனனின் இயற்பெயர்) கணவர் பெயர் சரவண குமார் என்றே  போடப்பட்டிருக்கும். 


கடந்த நவம்பர் மாதம் கஜா புயலில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள்,  கார், பைக்  மற்றும் பீரோவில் இருந்த  நகை, பணம், எனது 2 செல் போன்,  லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு அதிதி சென்றுவிட்டார். அதன்  பின்னர் அதை விசாரித்த போது அவர் சுஜித் என்ற நபருடன் தவறான உறவில்  இருக்கிறார் என்பது எனக்கு தெரியவந்தது. சுஜித்தை  நேரில் அழைத்து  விசாரித்தபோது அவர்களுக்கிடையேயான கள்ளக்காதலை ஒப்புக்கொண்டார். பின்னர் மதுரை  குடும்ப  நல நீதிமன்றத்தில் எங்களை சேர்த்து வைக்கும்படி வழக்கு  தொடர்ந்தேன். 


மூன்று வாரங்களுக்கு முன்பு அதிதி, சுஜித்துடன் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருப்பதாக தெரிந்ததை  அடுத்து அவருடன் சமாதானம் பேச சென்றேன். அப்போது நான் அதிதியுடன் பேச  முயன்ற போது என்னை பேசவிடாமல் தடுத்து, தாக்கியதால் நான் வளசரவாக்கம் காவல்  நிலையத்தில் புகார் அளித்தேன். ஒவ்வொரு  மனிதனுக்கும் கடந்த காலம் என ஒன்று இருக்கும். அதிதி, கடந்த  காலத்தில் ஒரு பையனை காதலித்து கொச்சியில் லிவிங் டுகெதர் வாழ்க்கை  வாழ்ந்திருக்கிறார். கேரளாவில் ஒருவரை நிச்சயதார்த்தம் செய்த நிலையில்  அவரை விட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறார். இதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. இந்த தகவல்களை எல்லாம் புகாராக கொடுத்து என் மனைவியை நான் அசிங்கப்படுத்த விரும்பாமல் சட்டப்பூர்வமாகவே அணுக நினைத்தேன். என்னுடன் திருமணம் நடக்கவில்லை என அவர் சொல்கிறார். ஆனால் திருமணம்  நடந்ததை நான் சட்டப்பூர்வமாக நிரூபிப்பேன். அவருடன் நான் குடும்பம்  நடத்தியதற்கு பல சாட்சிகள் இருக்கின்றன.இவ்வாறு அபி சரவணன் கூறினார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abhi Saravanan Bhagir ,someone ,Adi Kathaikal , Living Together, Engagement, Actress Adithi Menon, Kallakadal, Actor Abhi Saravanan
× RELATED சிவகங்கை மாவட்ட குடிமாரமத்து...