×

மேகதாதுவில் புதிய அணை விவகாரம்: தமிழக அரசு பதில் மனு தாக்கல்...பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதலுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இதுபற்றி மத்திய அரசு, கர்நாடகா மற்றும் காவிரி நீர்மேலாண்மை ஆணையம்  தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 


அதில், ‘‘நீர்வள ஆணையத்தின் அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கர்நாடகாவிற்கு நெட்கல் என்ற ஏரியிலிருந்து போதுமான குடிநீர் கிடைக்கிறது. அதனால் புதிய அணையும் கட்ட தேவையில்லை என அதில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”மத்திய அரசு, கர்நாடகா, கேரளா தரப்பில்  3 வாரத்தில் தங்களது பதில்மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Central Government ,affair ,New Delhi , Meghatadu, dam, Tamil Nadu government, petition, federal government, Supreme Court
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...