×

பிரதமர் மோடியின் அமேதி வருகை ரத்து

அமேதி: பிரதமர் நரேந்திர மோடியின் அமேதி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியாகும். இந்நிலையில், வருகிற 27ம் தேதி அமேதியின் முன்சிகன்ஞ் பகுதியில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட உள்ளதாகவும், பொதுகூட்டத்தில் உரையாற்ற உள்ளதாகவும் பாஜ சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ஆர்எம் மிஸ்ரா, ‘‘பிரதமர் மோடியின் 27ம் தேதி அமேதி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். அதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. 



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,visit , PM Modi, Amethi, cancellation visit
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!