×

டெல்லியில் காற்றுதரம் மோசம்

புதுடெல்லி : டெல்லியில் காற்றுதரம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்றுமுன்தினம் சிறிது முன்னேற்றம் அடைந்த நிலையில் நேற்று மோசம் நிலையை மீண்டும் எட்டியது. மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி டெல்லியில் காற்று தரம் 246 புள்ளிகளாக இருந்தது. டெல்லியில் மொத்தம் 29 இடங்கள் மோசம் நிலையில் இருந்தது. ஒரு பகுதி மிகவும் மோசமாக இருந்தது. நேற்று டெல்லியில் சில இடங்களில் மழை பெய்தது. இன்று காற்றின் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு காற்றின் தரத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Airtel ,Delhi , Air condition is bad, Delhi
× RELATED ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ரூ.401 கோடி நன்கொடை..!!