×

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கேரள மாநிலம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் தமிழகம் , கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 40 லட்சம் பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா

கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்த கண்ணகி வானுலகம் அடையும் முன் வந்த இடம்தான் ஆற்றுக்கால் என்பது ஐதீகம். இங்கு பகவதி அம்மன் என்ற பெயரில் கண்ணகிக்கு கோயில் கட்டி வழிபடுகின்றனர். திருவனந்தபுரம் அருகே உள்ள இந்த கோவிலில் மாசி மாதத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று 15கிமீ சுற்றளவில் பொங்கல் வைக்கின்றனர். கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின்  முக்கிய நிகழ்வான பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது.

தோற்றம்பாட்டு எனப்படும் கண்ணகி பாட்டு நிகழ்ச்சி

காலையில் கோயில் தந்திரி தெக்கேடத்து பரமேஸ்வரன் வாசுதேவன் பட்டதிரிப்பாடு, கோவிலில் இருந்து தீபம் எடுத்து வந்து பண்டார அடுப்பை பற்ற வைத்து பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது.பிற்பகல் 2.30 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுடன் பொங்கல் விழா நிறைவடையும். அப்போது குட்டி விமானம் மூலம் அர்ச்சனை பூக்கள் தூவப்படும். இதனிடையே கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பச்சைப் பந்தலில் தோற்றம்பாட்டு எனப்படும் கண்ணகி பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த பொங்கல் திருவிழாவில் கேரளா மட்டுமல்லாது தென் மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். கோவில் பொங்கல் வழிபாட்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pagagal Bhagavathi Amman Temple Pongal Festival: Millions of Women Participation , River Falls, Bhagavathi, Amman Temple, Pongal Festival, Kovalam,
× RELATED ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்...