×

பழமை மாறாமல் தொடர்கிறது பாரம்பரிய பாய்மர மீன்பிடிப்பு : மீன்பாடு அதிகமிருப்பதாக மீனவர்கள் உற்சாகம்

மண்டபம்: மண்டபத்தில் பாரம்பரியமாக பாய்மரப்படகு மூலம் மீன் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித்தல் பிரதான தொழிலாக உள்ளது.  மீனவர்கள் விசைப்படகு, நாட்டுப்படகு, கட்டுமரம், கரை வலை, வீச்சு வலை மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை ஒரு சில மீனவர்கள்,  மண்டபம்  தென் கடற்கரையிலிருந்து பாரம்பரியம் மாறாமல், பாய்மரப்படகு மூலமாகவும் மீன் பிடித்து வருகின்றனர்.

காற்றின் வேகத்திற்கு ஏற்ப செல்லக்கூடிய பாய்மர படகு மூலம், மீனவர்கள் மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்தமுறை மீன் பிடிப்பின்  மூலம் கடல் வளம், நீர் வளம் பாதுகாக்கப்படுகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாய்மர படகு மீன்பிடிப்பில் நேற்று முன்தினம் ஈடுபட்ட மீனவர்கள், ஏராளமான மீன்பாடு கிடைத்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fishermen , Sail, fish, fishermen
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...