×

அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : கலந்த காளைகள் 500, கண்டு ரசித்தது 50,000 மக்கள்

சிங்கம்புணரி: அரளிப்பாறையில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 500 காளைகள் சீறிப்பாய்ந்தன. போட்டியை மலையில் இருந்து 50 ஆயிரம் பேர் கண்டுரசித்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில் மாசிமக திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. எங்கும் இல்லாத வகையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலையில் அமர்ந்து மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர். இதனால் மலை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தது.

மஞ்சு விரட்டில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. இவற்றை கட்டுமாடுகளாக வயல்வெளிகளில் அவிழ்த்து விட்டனர். காளைகளை பிடிக்க முயன்ற 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயமடைந்த காரைக்குடி சிராவயல் புதூர் சரவணன் (46), சிங்கம்புணரி செல்வராஜ் (45), புரண்டிபட்டி ரகுபாண்டியன் (27), துவரங்குறிச்சி ராஜாராம் (35) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shores ,shore , Aralipparai, mancuvirattu, Bulls
× RELATED ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு...