×

வானில் ‘சூப்பர் மூன்’: பார்த்து ரசித்த பொதுமக்கள்: அடுத்தது 2026ல் தான் தெரியும்

சென்னை: நேற்று இரவு வானில் மிகப்பெரிய அளவில் பிரகாசமான ‘ சூப்பர் மூன்’ தெரிந்தது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.  இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன்  நேற்று இரவு 9.23 மணி அளவில் நிகழ்ந்தது. சாதாரண நாட்களில் நிலவு தெரிவதை விட இந்த சூப்பர் மூன் நிகழ்வின் போது நிலவு மிகவும் பெரிதாகவும், பூமிக்கு அருகிலும் தோன்றியது. நேற்று இரவு வானில் தோன்றிய சூப்பர் மூன், சாதாரண நாட்களில் நமக்கு தெரியும் நிலவின் அளவினை விட, 14 சதவீதம் மிகப்பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளி வீசக்கூடியதாகவும் இருந்தது. பூமிக்கு மிக அருகில் தோன்றும் இந்த நிலவு போல் இந்த ஆண்டு எந்த ஒரு நிகழ்வும் நடைபெறாது.
 குறிப்பாக இந்த நிலவு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மிகச்சிறப்பாக தெரிந்தது. இந்தியாவில் இது மிகவும் தெளிவாகவும், அற்புதமாகவும் தெரிந்தது. நேற்று மாலை 6 மணிக்கு டெல்லியிலும், மும்பையில் 6.30 மணிக்கும், கொல்கத்தாவில் 5.20 மணிக்கு தெரிந்தது. இந்த சூப்பர் மூனின் முழு வடிவத்தையும் நேற்று இரவு 9.23 மணியளவில் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.  இதற்கு முன்பு சூப்பர் மூன் நிகழ்வு கடந்த 2011ம் ஆண்டு தெரிந்தது. அடுத்து 2026ம் ஆண்டில் தான் மீண்டும் சூப்பர் மூன் பார்க்க முடியும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : moon ,sky ,one , super moon
× RELATED விருச்சிகம்