×

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக விவகாரம்: பேராசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றிய சங்கர் என்பவர் தனக்கு பதிவாளர் பதவியை மீண்டும் வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டி.என்.சாஸ்திரி, 32 பேராசிரியர்கள், உரிய கல்வித் தகுதியை கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, 32 பேரும் அவர்களின் கல்வித் தகுதி குறித்து பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டி.என்.சாஸ்திரி, பொறுப்பு பதிவாளர் ஜெயந்தி உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.  பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், தனி நீதிபதி தனது விருப்பம்போல் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் பதிவாளர் ஜெயந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானாக முன்வந்து தொடர்ந்தனர்.  இதையடுத்து, வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது பதிவாளர் ஜெயந்தி நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

 வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம், பேராசிரியர்களுக்கு முறையான கல்வித்தகுதி இல்லை என்று தெரிந்தும்  அதுகுறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?  என்று கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு நாளை (இன்று) வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambedkar Law University Affair: Professors , Ambedkar Law University.
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...