×

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு தடை விதிக்க ஐநா.வுக்கு பிரான்ஸ் பரிந்துரை

புதுடெல்லி: புலவாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு தடை விதிக்க கோரும் பரிந்துரையை பிரான்ஸ் விரைவில் கொண்டு வர உள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை பிரான்ஸ் அதிபரின் தூதரக ஆலோசகர் பிலிப்பி எடின்னி நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தனது இரங்கலை தெரிவித்த அவர் இருநாடுகளும் தூதரக அளவிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பிரான்ஸ் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், ஸ்ரீமசூத் அசாரை தீவிரவாதிகள் பட்டியலில் வைக்க கோரும் பரிந்துரையை ஐநாவில் விரைவில் நாங்கள் கொண்டு வருவோம். இன்னும் இரண்டொரு நாட்களில் இது நடைபெறும் என்றனர். கடந்த 2017ம் ஆண்டில் இது போன்ற பரிந்துரையை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் உதவியுடன் ஐநா.வில் பிரான்ஸ் கொண்டு வந்தது. இதற்கு அப்போது சீனா முட்டைக்கட்டையாக இருந்தது. இந்த நிலையில் தற்போது 2வது முறையாக மசூத் அசாருக்கு தடை விதிக்க கோரும் பரிந்துரையை பிரான்ஸ் கொண்டு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : France ,Masood Azhar ,UN ,Jaish-e-Mohammed , Jaish e Mohammed's president Masud Azar, banning, France
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்...