×

அர்ச்சகர் கீழே விழுந்து பலியானதை தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கைப்பிடியுடன் கூடிய புதிய பலகை: 2.5 அடி அகலத்தில் பொருத்தப்பட்டது

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2.5 அடி அகலத்தில் கைப்பிடியுடன் கூடிய புதிய பலகை பொருத்தப்பட்டுள்ளது. நாமக்கல்  ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகராக இருந்த வெங்கடேசன், கடந்த மாதம் சுவாமிக்கு  மாலை அணிவித்த போது 8 அடி உயரத்தில் உள்ள பலகையில் இருந்து கால் இடறி  கருவறையின்  விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து  நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலின் பாதுகாப்பு குறித்து, இந்து சமய  அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொறியியல் துறை வல்லுநர்கள் நேரில்  பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.அர்ச்சகர்களின் வசதிக்காக லிப்ட் அமைக்க  வாய்ப்பு உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் சுவாமிக்கு நாள்தோறும் அபிஷேகம் செய்யும்போது நீர் லிப்டில் விழும் என்பதால் இத்திட்டம்  கைவிடப்பட்டது.  

மேலும், அர்ச்சகர்கள் 8 அடி உயரத்தில் நின்று பணியாற்றும்  பலகையை ஆய்வுசெய்த அதிகாரிகள், 2 அடியாக உள்ள அகலத்தை 2.5 அடியாக  அகலப்படுத்துவதுடன், தடுப்புக்காக கைப்பிடி அமைக்க முடிவு செய்தனர்.
 இதையடுத்து கைப்பிடியுடன் கூடிய புதிய பலகை செய்யும் பணிகள், கடந்த ஒரு  வாரமாக நடைபெற்றது. இந்த பணிகள் நேற்று முன்தினம் நிறைவுற்றது. இதனையடுத்து  நேற்று முன்தினம் இரவு கோயிலில் சுவாமிக்கு முன்பாக இருந்த பழைய பலகை  அகற்றப்பட்டு, கைப்பிடியுடன் கூடிய புதிய பலகை பொருத்தப்பட்டது. இதையடுத்து  சுவாமிக்கு அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்தனர். இது பாதுகாப்பாக உள்ளதாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : priest ,board ,Namakkal Anjaneya , Archcher, Namakkal Anjaneya Temple
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி