×

ஜோகோவிச்சுக்கு லாரியஸ் விருது

விளையாட்டுத் துறையில் 2018ம் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான லாரியஸ் விருது வழங்கும் விழா, மொனாக்கோ சிட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக்  ஜோகோவிச் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். சிறந்த வீராங்கனை விருது அமெரிக்காவின் சிமோன் பைல்சுக்கு (ஜிம்னாஸ்டிக்ஸ்) வழங்கப்பட்டது. விளையாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்ததற்காக  அமெரிக்க பனிச்சறுக்கு வீராங்கனை லிண்ட்சி வோன் கவுரவிக்கப்பட்டார். இவர்களுடன் டைகர் வுட்ஸ் (கோல்ப்), நவோமி ஒசாகா (டென்னிஸ்), ஹென்ரிடா பார்கசோவா (பனிச்சறுக்கு), குளோ கிம் (ஸ்னோபோர்டு), எளுட்  கிப்சோகே (தடகளம்) ஆகியோரும் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது பெற்றனர். சிறந்த அணிக்கான விருதை பிரான்ஸ் கால்பந்து அணி தட்டிச் சென்றது. வாழ்நாள் சாதனையாளருக்கான விருது ஆர்சென் வெங்கருக்கு (பிரான்ஸ்,  கால்பந்து) வழங்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jokovich, Laureus Award
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...