×

அ.தி.மு.க-பாமக கூட்டணி கட்டாய கல்யாணம்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை:  அ.தி.மு.க-பாமக கூட்டணி என்பது கட்டாய கல்யாணம் போன்றது என டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். டெல்லியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,”அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அவர்களுடன் யார் சேர்ந்தாலும் அவர்களும் மூழ்குவார்கள். மேலும் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எந்த நலன் கருதி சேர்ந்தாலும் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. இவர்கள் கூட்டணி என்பது கட்டாய கல்யாணம் ஆகும். நாடாளுமன்ற தேர்தல் குறித்த தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு முடியும் நிலையில் வந்துவிட்டது; காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தேர்தல் பிரசாரத்திற்கு பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு வருவார். தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தல் பணியாற்ற தலைவர் ராகுல்காந்தி தற்போது அறிவுறுத்தினார். இவ்வாறு அவர் கூறினா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Thirunavukarajar , AIADMK, PM, coalition, forced marriage, Thirunavukkarar
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...