×

சில்லி பாயின்ட்...

*  நியூசிலாந்து - வங்கதேசம் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டுனெடின் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30க்கு தொடங்கியது.
* ஸ்மித், வார்னர் இருவரும் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. ஆசிரியர், வழிகாட்டி இல்லாத மாணவர்களைப் போல நாங்கள் அவதிக்குள்ளானோம்’ என்று வேகப் பந்துவீச்சாளர்  ஹேசல்வுட் கூறியுள்ளார்.
* 2019-20 சீசனில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக ஹாமில்டன் மசகட்சா செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 டி20, 5 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி, டேராடூன் ராஜிவ் காந்தி சர்வதேச  ஸ்டேடியத்தில் நடத்தப்படும். முதல் டி20 நாளை நடக்கிறது.

* ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய சச்சினின் சாதனையை (49 சதம்) இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (39 சதம்) முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று பயிற்சியாளர் முனிஷ் பாலி தெரிவித்துள்ளார்.
* ஹர்திக் பாண்டியாவை விட தற்போது ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சிறந்த ஆல் ரவுண்டராகத் திகழ்கிறார் என்று ஆஸி. முன்னாள் நட்சத்திரம் மேத்யூ ஹேடன் பாராட்டி உள்ளார்.
* துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலிக் கெர்பர், சிமோனா ஹாலெப், கார்பினி முகுருசா, எலினா ஸ்விடோலினா, பெத்ரா குவித்தோவா ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு  முன்னேறி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New Zealand, Bangladesh, Smith, Warner
× RELATED அக்சர் 66, பன்ட் 88*, ஸ்டப்ஸ் 26* கேப்பிடல்ஸ் 224 ரன் குவிப்பு