×

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்: எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா அறிவிப்பு

சென்னை: மத்திய அரசுடன் மார்ச் மாதம்  நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா அறிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் சிறுவள்ளூர் சாலையில் உள்ள   ரயில்வே நியூ ஹாலில் நேற்று காலை ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் சென்னை  கோட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சென்னை கோட்ட தலைவர் பால் மேக்ஸ்வெல் தலைமை வகித்தார். தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா மற்றும் தலைவர் ராஜா தர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

பின்னர் எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரயில்வே ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் ஏழாவது ஊதியக் கமிஷனை முழுவதுமாக அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட நினைத்தோம். மக்கள் நலனை கருத்தில் கொண்டே இதுவரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தோம். தொடர்ந்து மத்திய அரசு எங்களை சோதித்து வருகிறது.  மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் போராட்டத்தை தள்ளி வைத்து கொண்டே செல்கிறோம். ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. எனவே மார்ச் 13ம் தேதி ஒவ்வொரு மண்டலத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தொடர்ந்து மார்ச் 28ம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையாக வேலை நிறுத்தத்தை அறிவிப்போம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Strike ,Kanniah ,negotiations ,SRM , Talks, Strike Struggle, SRM General Secretary Kanniah
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து