×

இன்று இரவு வானில் ‘சூப்பர் மூன்’

சென்னை: இந்தாண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன், ‘பெளர்ணமி’ யான இன்று இரவு 9.23 மணி அளவில் நிகழ உள்ளது. சாதாரண நாட்களில் நிலவு தெரிவதை விட இந்த சூப்பர் மூன் நிகழ்வின் போது நிலவு மிகவும் பெரிதாகவும், பூமிக்கு அருகிலும் தோன்றும். இதனை வெறும் கண்களால் நாம் காண முடியும். குறிப்பாக, இன்று இரவு வானில் தோன்றும் சூப்பர் மூன், சாதாரண நாட்களில் நமக்கு தெரியும் நிலவின் அளவினை விட 14 சதவீதம் மிகப்பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளி  வீசக்கூடியதாகவும் இருக்கும். பூமிக்கு மிக அருகில் தோன்றும் இந்த நிலவு போல் இந்த ஆண்டு எந்த ஒரு நிகழ்வும் நடைபெறாது. குறிப்பாக இந்த நிலவு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மிகச்சிறப்பாக தெரியும். இந்தியாவில் இது மிகவும் தெளிவாகவும், அற்புதமாகவும் தெரியும். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியிலும், மும்பையில் 6.30 மணிக்கும், கொல்கத்தாவில் 5.20 மணிக்கும் தெரியும். இந்த சூப்பர் மூனின் முழு வடிவத்தையும் இரவு 9.23 மணியளவில் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.

இந்த சூப்பர் மூன் நிகழ்வு கடந்த 2011ம் ஆண்டு தெரிந்தது. அதற்கு பிறகு இன்று வானில் தெரிய உள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் மிகவும் பிரபலமாக இந்த சூப்பர் மூன் பேசப்பட்டது. இதேபோல், இன்று பூமிக்கு மிகவும் அருகில் தோன்றும் சூப்பர் மூன் பார்க்க தவறினால் அடுத்து 7 ஆண்டுகள் கழித்து 2026ம் ஆண்டில் தான் பார்க்க முடியும். இந்தியா முழுவதும் இந்த நிலவை காண சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு பிரகாசமான, பெரிய நிலவை பார்க்க பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 'Super Moon'
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...