×

அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடக்கம்

வாஷிங்டன்: அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடங்குகிறது. இரு நாடுகளும் மாறி மாறி, இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தி, வர்த்தகப் போரில் இறங்கின. இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் மார்ச் 1ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை தொடங்கின. வாஷிங்டனிலும், பெய்ஜிங்கிலும் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைதளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இருப்பினும் பேச்சுவார்த்தை சிறப்பாக போய்க்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். தேவைப்பட்டால் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு வசதியாக, கெடு தேதியை மார்ச் 1-க்கு பிறகும் நீட்டிக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வாஷிங்டனில் இன்று துவங்குகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trade-talks ,US ,China , trade-talks, US,China, resume today
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...