×

உலகிலேயே முதல்முறையாக 5ஜி வசதி கொண்ட சீனாவின் ஷாங்காய் ரயில் நிலையம்!

ஷாங்காய்: சீனாவில் உள்ள ஷாங்காய் ரயில் நிலையம் உலகில் அதிவேக 5ஜி தொழில்நுட்ப சேவையை பயன்படுத்தி பயணிகளை கவர்ந்து வருகிறது. மிகப்பெரிய ரயில் நிலையமான அங்கு நாள்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வருகை தருவதால் அவர்களுக்கு நிறைவான சேவை வழங்கும் விதமாக நடமாடும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹவாய் (Huawei), ஷாங்காயின் ஹாங்கியோ (Hongqiao) ரயில் நிலையத்தில் உட்புற 5 ஜி நெட்வொர்க்குகளை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் ஹாங்கியோ ரயில் நிலையமானது உலகிலேயே 5ஜி டி.ஐ.எஸ். (5G digital indoor system) வசதி கொண்ட முதல் ரயில் நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shanghai Railway Station ,China ,world , China,Shanghai,Railway Station,world's first,5G facility,world,
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு