×

அமைச்சருக்கு சாதகமாக செயல்பட்ட திருப்பத்தூர் டிஎஸ்பி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் அதிரடி

திருப்பத்தூர்:   திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சப்-டிவிஷன் டி.எஸ்.பி.யாக கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தங்கவேலு பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கண்காணித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 26ம் தேதி மாலை தாமலேரி முத்தூர் கூட்ரோடு பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த அமைச்சர் கே.சி.வீரமணி சகோதரர் கே.சி.அழகிரி காரில் அதிமுக துண்டுபிரசுரங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய டீ-சர்ட், வேஷ்டிகள் உள்ளிட்ட பொருட்களை இருந்தது தெரியவந்தது.இதைடுத்து, பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், தேர்தல் பறக்கும் படையினர், ேஜாலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அமைச்சர் கே.சி.வீரமணி, கே.சி.அழகிரி மற்றும் கார் ஓட்டுநர் உட்பட 5 பேர் மீது காலதாமதமாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, தேர்தல் பார்வையாளர் விஜய்பகதூர் வர்மா ஆளுங்கட்சிக்கு ஆதரவாக டிஎஸ்பி தங்கவேல் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்தார். அதன்பேரில் தேர்தல் ஆணையம் திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலுவை நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. …

The post அமைச்சருக்கு சாதகமாக செயல்பட்ட திருப்பத்தூர் டிஎஸ்பி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,DSP ,Election Commission ,Tirupathur ,Thangavelu ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் 104 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது..!!