×

பண மோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் யாமீன் கைது: சொத்துகள் முடக்கம்

மாலத்தீவு: பண மோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் யாமீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தேர்தலின்போது சட்ட விரோதமாக ரூ.10 கோடி பணம் பெற்றதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பான வழக்கு விசாரணை கிரிமினல் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் அப்துல்லா யாமீன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் தலைநகர் மாலேவில் அருகே யுள்ள தூனிட்கோ தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாமீனுக்கு 15 வருட ஜெயில் தண்டனையும், மோசடி செய்த பணத்தை விட 3 மடங்கு அபராத தொகையும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மாலத்தீவில் உள்ள யாமீனின் வங்கி கணக்குகளையும் ரூ.45 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் கோர்ட்டு முடக்கி வைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abdul Yameen ,Maldives , Maldives,former president,Abdul Yameen,arrested,Assets freezing
× RELATED ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்கப்...