×

கணியம்பாடி அடுத்த நாகநதி கிராமத்தில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

அணைக்கட்டு: கணியம்பாடி அடுத்த நாகநதி கிராமத்தில் நடந்த எருதுவிடும் விழாவில் காளைகள் சீறப்பாய்ந்து ஓடியது. வேலூர் தாலுகா கணியம்பாடி அடுத்த நாகநதி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு 36ம் ஆண்டு காளைவிடும் விழா நேற்று நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மாணிக்கம், ஜெயசீலன் தலைமை தாங்கினர். ஊர் நாட்டாமை ஜோதி, முன்னாள் கவுன்சிலர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ரமேஷ் தலைமையில் விழா உறுதிமொழி ஏற்று கொண்டனர். தொடர்ந்து விழா காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில் வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி, பென்னாத்தூர், துத்திக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.

சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை உற்சாகத்துடன் விரட்டினர். விழா பிற்பகல் 2.30 மணியளவில் முடிந்தது. இதையடுத்து, விழாவில் வேகமாக ஓடி முதல் இடம் பிடித்த காளை மாட்டின் உரிமையாளருக்கு 75 ஆயிரமும், 2வது பரிசாக 65 ஆயிரம், 3வது பரிசாக 55 ஆயிரம் மற்றும் டேபிள்பேன் உட்பட மொத்தம் 101  பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் சீறிப்பாய்ந்த மாடுகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kampiyampadi ,Naganadi ,festivals , Kaniyampati, nakanati, Bulls
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...