×

பேருந்தில் ஏறியபோது கீழே விழுந்து பலி விற்பனையாளர் குடும்பத்துக்கு ரூ.21.83 லட்சம் இழப்பீடு: எம்டிசிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பேருந்தில் ஏறியபோது கீழே விழுந்து பலியான விற்பனையாளர் குடும்பத்தினருக்கு ரூ.21.83 லட்சம் இழப்பீடு வழங்க எம்டிசிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் கணேஷ்குமார். விற்பனையாளராக வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி, ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 9.6.2015 அன்று வேலை சம்மந்தமாக வெளியில் செல்ல கணேஷ்குமார், எழும்பூரில் இருந்து பாரிமுனைக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது இவர் ஏறுவதை பார்க்காமல் டிரைவர் பேருந்தை வேகமாக எடுத்துள்ளார். அதில் நிலை தடுமாறி கிழே விழுந்த அவர் மீது பேருந்து டயர் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு இழப்பீடு கோரி அவரது மனைவி விஜயலட்சுமி, மகள் மற்றும் தந்தை ஆகியோர் சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணேஷ்குமார் இறப்பிற்கு பேருந்து டிரைவர் கவணக்குறைவே காரணம் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவரது குடும்பத்தினருக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ரூ.21 லட்சத்து 83 ஆயிரம் இழப்பீடு வழங்க  வேண்டும், என உத்தரவிட்டார்….

The post பேருந்தில் ஏறியபோது கீழே விழுந்து பலி விற்பனையாளர் குடும்பத்துக்கு ரூ.21.83 லட்சம் இழப்பீடு: எம்டிசிக்கு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MTC ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…