×

தேர்தல் நெருங்கும் நிலையில் போர் மாயையை உருவாக்குவதா?: பாஜ மீது மம்தா தாக்கு

கொல்கத்தா: புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்திருக்கும் நேரம் குறித்து சந்தேகத்தை கிளப்பி உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘தேர்தல் நடக்கும் சமயத்தில் போர் மாயையை உருவாக்குவதா?’’ என  பாஜவை கடுமையாக விமர்சித்துள்ளார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், போர் நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது வெறும் நிழல் போர். மாயை. ஒரு மிகப்பெரிய துர்சம்பவம் நடந்திருக்கும் நிலையில், அதற்கு பொறுப்பேற்று  பதவி விலகாமல், அமித்ஷாவும், மோடியும் அரசியல் பேச்சை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் கூட, சிஆர்பிஎப் வீரர்கள் நீண்ட கான்வாயில் நெடுஞ்சாலையில் பயணம் செய்ய அனுமதித்தது எப்படி? இங்கு தேர்தல் நெருங்கும் நிலையில்,  திடீரென பாகிஸ்தான் உற்சாகம் பெற்றது எப்படி? நாடாளுமன்ற கூட்டம் முடிந்ததும் இந்த சம்பவம் அரங்கேறியது கூட சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பதான்கோட்டில் தீவிரவாதிகள் தாக்கியதற்கு பிறகு எதுவும் செய்யாத அரசு, இப்போது தேர்தல் நெருங்கியதும் போர் சூழலை உருவாக்க முயற்சிக்கிறது. கடந்த 5 ஆண்டாக பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது  ஏன்? பாஜ-ஆர்எஸ்எஸ்-விஎச்பி கூட்டு சேர்ந்து, நாட்டின் தற்போதைய சூழலை பயன்படுத்தி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை பரப்ப முயற்சிக்கின்றன. மதக் கலவரத்தை தூண்டி விடப்பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கடுமையாக  விமர்சித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : battle ,election ,attack ,Bhajan ,Mamta , Mamata Banerjee, West Bengal Chief Minister
× RELATED தேர்தல் விவாத நிகழ்ச்சியில் பாஜ...