பிரக்சிட் விவகாரம்: இங்கி. எதிர்க்கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்

லண்டன்: பிரக்சிட் விவகாரத்தில், இங்கிலாந்து எதிர்க்கட்சியான லேபர் கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகியுள்ளனர். ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும்(பிரக்சிட்) நடவடிக்கையை பிரதமர் தெரசா மே மேற்கொண்டுள்ளார். மார்ச் 29ம் தேதிக்குள் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் இங்கிலாந்து வெளியேற வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது. இது இங்கிலாந்தின் பொருளாதாரம் உட்பட பல விஷயங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிரக்சிட் விவகாரத்தில் எதிர்கட்சியான லேபர் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. பிரக்சிட் விவகாரத்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு உடந்தையாக, லேபர் கட்சியின் தலைவர் ஜெரிமி  கார்பின் அணுகுமுறை  உள்ளது என குற்றம்சாட்டி அந்த கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகியுள்ளனர். இவர்கள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனி அணியாக அமரப்போவதாக கூறியுள்ளனர்.

இது குறித்து யூத மதத்தைச் சேர்ந்த எம்.பி லூாியா பெர்ஜர் கூறுகையில், ‘‘நாங்கள் லேபர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளோம். இது கஷ்டமான மற்றும் அவசியமான முடிவு. அடாவடித்தனமான மற்றும் மிரட்டும்  கலாச்சாரத்திலிருந்து நான் வெளியேறுகிறேன். ஒரே எண்ணம் கொண்ட இங்கிலாந்தின் பல பகுதிகளை சேர்ந்த 7 எம்.பி.க்கள், இனிமேல் தனி அணியாக செயல்படுவோம்’’ என்றார். மற்றொரு எம்.பி. மைக் கேப்ஸ் கூறுகையில், ‘‘நாட்டுக்கு மிகப் பெரிய அளவிலான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பாதிப்பை ஏற்படுத்தும் பிரக்சிட் ஒப்பந்தத்துக்கு உடந்தையாக எதிர்க்கட்சி தலைவர் கார்பின்  செயல்படுகிறார். இது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

பிரக்சிட் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து மக்களிடம் 2வது கருத்துக் கேட்பு நடத்த வேண்டும் என்ற பிரசாரத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் ஆதரவாக உள்ளனர்.  இதுகுறித்து லேபர் கட்சியின் தலைவர் கார்பின் கூறுகையில், ‘‘2017 தேர்தலில் லட்சக்கணக்கான மக்களை கவர்ந்த கொள்கைகளை எம்.பிக்கள் தொடர முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. பிரக்சிட் ஒப்பந்தத்தில்  கன்சர்வேடிவ் கட்சி குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான மாற்று திட்டத்தை லேபர் கட்சி ஒருங்கிணைக்க தொடங்கியுள்ளது’’ என்றார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : affair ,Proxim ,MPs ,Ink. 7 , Proxim affair, ink. Opposition, MPs
× RELATED ஐஏஎஸ் அதிகாரி மகளுடன் நெருக்கமாக...