70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற 24 வயது வாலிபர் கைது

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் அருகே 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக் கொன்ற 24 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆலங்குப்பத்தை சேர்ந்தவர் அஞ்சலை (70). இவர் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகே அவரது மகள் நாகம்மாள், கணவர் முனியன், மகன்கள் அஜித், வேலு ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முனியன் சிறுநீர் கழிப்பதற்காக வெளியில் வந்த போது, அஞ்சலையின் வீடு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது, நிர்வாண நிலையில் அஞ்சலை பிணமாக கிடந்ததை கண்டு அதிச்சி அடைந்தார். புகாரின்படி திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அஞ்சலை பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பதும் அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.  

இந்நிலையில் அரசூர் 4 வழி சந்திப்பில் ரோந்து சென்ற போலீசார், அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஒட்டனந்தலை சேர்ந்த கவிதாஸ் (24) என்பதும், மூதாட்டியை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு நகைகளை பறித்து சென்றதும், அரசூர் பாரதி நகரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் பைக்கை திருடிச்சென்றதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : maid , The 70-year-old murdered, raped
× RELATED மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது