×

மகளிர் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடனான பயிற்சி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கு பயிற்சி பெறும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன்  நேற்று மோதியது.மும்பை, வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வாரியத் தலைவர் லெவன் அணி 49 ஓவரில் 154 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. மின்னு மணி அதிகபட்சமாக 28 ரன் எடுத்தார்.  பாரதி புல்மாலி 23, ஹர்லீன் தியோல் 21, கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 19, பிரியா பூனியா 15 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஷ்ரப்சோல் 4, எல்விஸ் 2,  எக்லஸ்டோன், ஹார்ட்லி, லாரா மார்ஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 4.5 ஓவரில் 11 ரன்னுடன் 4 விக்கெட் இழந்து தடுமாறியது. பின்னர் சுதாரித்து விளையாடிய இங்கிலாந்து வீராங்கனைகள் 37.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து வெற்றியை  வசப்படுத்தினர். டேனியல் வியாட் 22, எல்விஸ் 13, ஷ்ரப்சோ, 23 ரன் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஹீதர் நைட் 64 ரன் (86 பந்து, 9 பவுண்டரி), வின்பீல்டு 23 ரன்னுடன் (22 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல்  இருந்தனர். முதல் ஒருநாள் போட்டி மும்பையில் பிப். 22ம் தேதி நடைபெற உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : win ,England ,women's cricket practice match , Women's cricket practice match, England, win
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்