டென்னிஸ் தரவரிசை டாப் 10ல் செரீனா

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (37 வயது), மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் மீண்டும் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார். நம்பர் 1 வீராங்கனையாக நீண்ட காலம் கொடிகட்டிப் பறந்த செரீனா, குழந்தை  பெற்றுக் கொண்டு நீண்ட ஓய்வில் இருந்த காரணத்தால் தரவரிசையில் பின்னடைவை சந்தித்தார். ஒரு கட்டத்தில் 491வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நடப்பு சீசனில் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸி. ஓபனில்  களமிறங்கி கால் இறுதி வரை முன்னேறினார். இந்த நிலையில், நேற்று வெளியான ரேங்கிங்கில் செரீனா 3406 புள்ளிகளுடன் 10வது இடத்தை பிடித்துள்ளார். ஜப்பானின் நவோமி ஒசாகா (6970), சிமோனா ஹாலெப் (ரோமானியா,  5537), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா, 5307) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: