×

இந்தியாவுடனான உறவில் பதற்றம்: ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்தது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்:  இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சொகைல் மஹ்மூத்தை அவசரமாக நாடு திரும்புமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தையடுத்து, பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை நாடு என்ற சலுகையை இந்தியா ரத்து செய்தது.  மேலும், பாகிஸ்தான் தூதர் சொகைல் மஹ்மூத்தை கடந்த வெள்ளியன்று  நேரில் அழைத்து, வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தாக்குதல் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். புல்வாமா தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருகி  உள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியாவை தாக்குதல் ெதாடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தாய்நாட்டிற்கு வருமாறு மத்திய அரசு அழைத்திருந்தது.இந்நிலையில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கான தனது தூதரை ஆலோசனை நடத்துவதற்காக அழைத்துள்ளது. இதனையடுத்து நேற்று காலை சொகைல் மஹ்மூத் டெல்லியில் இருந்து புறப்பட்டார். அவர் எத்தனை நாட்கள் அங்கு  தங்கியிருப்பார் எனத் தெரியவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Pakistan ,ambassador , India, Consulting, Ambassador, Pakistan
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!