×

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 122 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றியவர்கள், சொந்த மாவட்டங்களில் இருப்பவர்கள் என 122 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் ெசய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், நாடு முழுவதும் அரசு பணியிடங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் உள்ள அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் காவல் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் உள்ள அதிகாரிகள் பணியிடமாற்றம் ெசய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை, தமிழ்நாடு போலீஸ் அகாடமி டிஎஸ்பியாக இருந்த கார்த்திகா திருவல்லிக்கேணி உதவி கமிஷனராகவும், திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக இருந்த வெற்றிசெழியன், திருவொற்றியூர் உதவி கமிஷனராகவும், கோயம்பேடு உதவி கமிஷனராக இருந்த ஜான் சுந்தர் ஆவடி உதவி கமிஷனராகவும்,

ஆவடி உதவி கமிஷனராக இருந்த ஜெயராமன் கோயம்பேடு உதவி கமிஷனராகவும், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த ரவி புழல் உதவி கமிஷனராகவும், புழல் உதவி கமிஷனராக இருந்த வெங்கடேசன் பட்டாபிராம் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர். பட்டாபிராம் உதவி கமிஷனராக இருந்த ரமேஷ் மயிலாப்பூர் உதவி கமிஷனராகவும், மயிலாப்பூர் உதவி கமிஷனராக இருந்த உக்கரபாண்டியன் எண்ணூர் உதவி கமிஷனராகவும், எண்ணூர் உதவி கமிஷனராக இருந்த தினகரன் ராயபுரம் உதவி கமிஷனராகவும், ராயபுரம் உதவி கமிஷனராக இருந்த கண்ணன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு (II)க்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு(II)ல் இருந்த சுப்புராயன் கிண்டி உதவி கமிஷனராகவும், கிண்டி உதவி கமிஷனராக இருந்த பாண்டியன் மத்திய குற்றப்பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த பிரபாகரன் எழுப்பூர் உதவி கமிஷனராகவும், எழும்பூர் உதவி கமிஷனராக இருந்த சுப்ரமணி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் இருந்த மகேஸ்வரி வேப்பேரி உதவி கமிஷனராகவும், வேப்பேரி உதவி கமிஷனராக இருந்த சார்லஸ் ஷாம் ராஜதுரை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக இருந்த நடேசன் மீனம்பாக்கம் உதவி கமிஷனராகவும், மீனம்பாக்கம் உதவி கமிஷனராக இருந்த விஜயகுமார் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக இருந்த கலியன் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராகவும், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராக இருந்த முத்துவேல் பாண்டியன் பூந்தமல்லி உதவி கமிஷனராகவும், பூந்தமல்லி உதவி கமிஷனராக இருந்த செம்பேடு பாபு எஸ்ஆர்எம்சி உதவி கமிஷனராகவும், எஸ்ஆர்எம்சி உதவி கமிஷனராக இருந்த சந்திரசேகரன் நவீன கட்டுப்பாட்டு அறைக்கும், நவீன கட்டுப்பாட்டு அறையில் இருந்த முருகன் துறைமுகம் உதவி கமிஷனராகவும், துறைமுகம் உதவி கமிஷனராக இருந்த ஆனந்த குமார் நவீன கட்டுப்பாட்டு அறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

நவீன கட்டுப்பாட்டு அறையில் இருந்த தொல்காப்பியன் தி.நகர் உதவி கமிஷனராகவும், தி.நகர் உதவி கமிஷனராக இருந்த செல்வன் மத்திய குற்றப்பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த விஸ்வேஸ்வரய்யா நீலாங்கரை உதவி கமிஷனராகவும், நீலாங்கரை உதவி கமிஷனராக இருந்த சீனிவாசலு சேலையூர் உதவி கமிஷனராகவும், சேலையூர் உதவி கமிஷனராக இருந்த வினோத் சாந்தாராம் அடையார் உதவி கமிஷனராகவும், அடையார் உதவி கமிஷனராக இருந்த ஆரோக்கிய ரவீந்திரன் மத்திய குற்றப்பிரிவுக்கும், திருவொற்றியூர் உதவி கமிஷனராக இருந்த செந்தமிழ்வேலன் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இருந்த பன்னீர்செல்வம் செம்பியம் உதவி கமிஷனராகவும், செம்பியம் உதவி கமிஷனராக இருந்த அரிகுமார் சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், சைதாப்ேபட்டை உதவி கமிஷனராக இருந்த அனந்தராமன் நுண்ணறிவு பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த சங்கரலிங்கம் சைதாப்பேட்டை உதவி கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, காஞ்சிபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த பொற்செழியன், வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கும், வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் இருந்த சுந்தரமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கும், கடலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை கழக டிஎஸ்பியாக இருந்த கோமதி, விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு என தமிழகம் முழுவதும் மொத்தம் 122 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,Echo ,Chennai ,TG Rajendran , Parliamentary Elections, Tamilnadu, 122 DSPs Workplace Change
× RELATED 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு…