×

விதிமுறைகளை மீறி பாறை உடைப்பு கல்குவாரிகளால் தொடரும் அதிர்வு: வில்லுக்குறி அருகே மக்கள் கதறல்

திங்கள்சந்தை: நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறி-தோட்டியோடு சந்திப்பு பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் உள்ள பாறைகளை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உடைத்து வருகின்றன. அதன்படி கல்குவாரிகளை தனியார்கள் குத்தகைக்கு எடுத்து பாறைகளை உடைத்து மாவட்டத்தின் பல்வேறு, பகுதிகளுக்கும் எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு அனுமதியுடன் செயல்படும் ஒரு சில கல்குவாரிகள் விதிமுறைகளை மீறி பாறைகளை வெடிக்க வைக்க அளவுக்கு அதிகமாக வெடிமருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால் கல்குவாரியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றியுள்ள வில்லுக்குறி, இடமருதூர், தோட்டியோடு, பரசேரி, கொன்னக்குழிவிளை, கரிஞான்கோடு உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சமீபகாலமாக கல் குவாரிகளில் விதிமுறைகளை மீறி பாறைகளை உடைப்பதால் அதிர்வு ஏற்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குடியிருக்கும் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. ஒரு சில வீடுகள் இடிந்து விழுந்தும் உள்ளன. அதிர்வு காரணமாக பொது மக்கள் மட்டுமின்றி கர்ப்பிணி பெண்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் பாறைளை வெடிக்கும் சத்தம் கேட்டு மக்கள் வீட்டைவிட்டு அலறியடித்து வெளியே ஓடி வரும் நிலையும் உள்ளது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறுகையில்: நாளுக்கு நாள் விதிமுறைகளை மீறி பாறை வெடிப்பதால் எங்கள் பகுதியில் அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் கீறல் விழுந்துள்ளது. மேலும் சில வீடுகளும் இடிந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் இது விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி விதிமுறையை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் செயல்படாமல் இருக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்களையும் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இனஸ்கோ அமைப்பு இந்த கனிமவளங்களை பாதுகாக்க வேண்டும். கனிம வளங்களை சுரண்ட கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rock climbing violation ,villain , Calgary, vibration, people, screams
× RELATED திரைப்பட வளர்ச்சிக் கழக பொறுப்பு: பார்வதியை நீக்கியது கேரள அரசு