மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக- சிவசேனா இணைந்து போட்டி.. தேவேந்திர பட்னவிஸ் அறிவிப்பு

மும்பை: நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா இணைந்து போட்டியிடும் என்று மும்பையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா- சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் எந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டணி முடிவுக்கு பின் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பட்னவிஸ் மற்றும் உத்தவ் தாக்கரே கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பின் போது கூட்டணி உடன்பாடு குறித்து பட்னவிஸ் அறிவித்தார். அப்போது மராட்டியத்தில் உள்ள  48  தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என மராட்டிய முதல்வர் பட்னவிஸ் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவை தேர்தலில் 50-50 என போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: