×

ஜோசப் சாமுவேலை ஆதரித்து டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முகப்பேர் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொது நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது டி.ஆர்.பாலு எம்.பி பேசியதாவது: அம்பத்தூர் தொகுதியில் அதிகரித்துள்ள வீட்டு வரியை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முகப்பேர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். பழைய கழிவுநீர் இணைப்பு மறுசீரமைப்பு செய்யப்படும். ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும். அரசு உணவகங்கள் மேம்படுத்தப்படும். எனவே, நீங்கள் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், எம்.டி.ஆர் நாகராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் தொமுச மோகன், தலைமை கழக வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் சாந்தகுமாரி, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பீர்முகம்மது, ரோமியோ, கராத்தே ரவி, மோகன்குமார், மாரியப்பன், முருகன், பால்சாமி, லெனின்சுந்தர், கவுரிசங்கர், இப்ராகிம், தாமோதரன், ஜஸ்டின், கார்வின், திமுக வட்ட செயலாளர்கள் எம்.இ.சேகர், பிரகாஷ், டிக்கா, சீனிவாசன், லோகநாதன், நெப்போலியன், சுந்தர்ராஜ், விஜயகுமார், சண்முகம், லால், கமல், கண்ணபிரான், நவராஜ் ரவி, ரகு, ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசை ராஜா உள்பட கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்….

The post ஜோசப் சாமுவேலை ஆதரித்து டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : DR Balu ,Joseph Samuel ,Ambattur ,DMK ,treasurer ,DR ,Balu ,Ambatur ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை...