×

வீடு வாங்குவோரை கவர புதுமை ஹெலிகாப்டரில் வாடிக்கையாளர்களை அழைத்து செல்லும் காசா கிராண்ட்

சென்னை: காசா கிராண்ட் நிறுவனம் இதுவரை தென்னிந்தியாவில் எந்த கட்டுமான நிறுவனமும் அறிவிக்காத வகையில், அந்நிறுவனம் முகப்பேரில் கட்டிவரும் காசா கிராண்ட் டியூடரில் ஏப்ரல் மாதம் 10ம் தேதிக்குள் வீடு வாங்கும் முதல் 10 வாடிக்கையாளர்களை ஹெலிகாப்டரில் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. வீடு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகை திட்டங்களை கட்டுமான நிறுவனங்கள் அறிவித்திருந்தாலும் காசாகிராண்டின் இந்த திட்டமானது மிகவும் புதுமையான திட்டம் ஆகும். மேலும் தென்னிந்திய ரியல் எஸ்டேட் துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். காசாகிராண்டின் இந்த சலுகையானது வாடிக்கையாளர்களிடையே ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும். காசா கிராண்ட்டியூடர் சென்னையின் முக்கிய பகுதியான முகப்பேரில் அமைய உள்ளது. இங்கு 441 வீடுகள் கட்டப்படுகின்றன. இங்கு 2, 3 மற்றும் 4 படுக்கை அறைகளைக் கொண்ட நவீன பிரீமியம் பிளாட்கள் கட்டப்பட உள்ளன. இந்த சலுகை திட்டமானது ஏப்ரல் மாதம் 10 – ம் தேதி வரை வீடு வாங்க 10 சதவீத தொகை அல்லது அதற்கு மேல் முன் பணம் செலுத்தி பதிவு செய்யும் முதல் 10 வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இது குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள 9884802388 தொடர்பு கொள்ளலாம்….

The post வீடு வாங்குவோரை கவர புதுமை ஹெலிகாப்டரில் வாடிக்கையாளர்களை அழைத்து செல்லும் காசா கிராண்ட் appeared first on Dinakaran.

Tags : Casa Grand ,Chennai ,Gaza Grand Company ,South India ,Gaza ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...