×

சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீதான ஆட்கொணர்வு மனு : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை : சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கக்கோரிய வழக்கில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் போலீஸ் பிப்ரவரி 22ல் நேரில் ஆஜராகி பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை; சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம், விழுப்புரம் எஸ்.பிக்கள் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கக்கோரிய ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற வீடியோவை வெளியிட்ட அடுத்தநாள் முகிலன் காணாமல் போனார். பிப்.15 இரவு 11.50க்கு மதுரைக்கு செல்வதாக சென்ற முகிலன் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hawking Case for Social Activist ,Miguel: High Court , Habea corpus, trial, high court, mugilan
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...