நாகையில் 15 வயது சிறுமியை ஒரு வாரமாக அடைத்து வைத்து பாலியல் கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் மீது போக்சோ சட்டம்

நாகை: நாகப்பட்டினத்தில் 15 வயது சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காடம்பாடி பகுதியை சேர்ந்த சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் பெற்றோரைத் தொடர்பு கொண்ட சிறுமி, தான் வேளாங்கண்ணியில் இருப்பதாக கூறியதையடுத்து பெற்றோர் அங்கு சென்று அவரை மீட்டனர். மேலும் அரசு மருத்துவமனையில் நடத்திய மருத்துவ பரிசோதனையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நிரூபணமானது.

அதில் தன்னை ஒரு வார‌மாக வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றில் அடைத்து வைத்து, 5 நபர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த‌தாக சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்ற சிலர், விடுதியில் அறையில் ஒருவாரமாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விஜய், அரவிந்த் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>