×

புதிய சிபி 300ஆர் பைக் ஹோண்டா அறிமுகம்

சென்னை:  ஹோண்டா மோட்டர்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இளம் தலைமுறையினருக்கான புதிய ’சிபி300ஆர்’ இருச்சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. முதல் முறையாக பெரிய பைக்கில், கம்பீரத்துடன் அமர்க்களானபயணத்தை விரும்புபவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.    நியோ ஸ்போர்ட்ஸ் டிஎன்ஏ   அவசியமான, அட்டகாசமான, அம்சங்களை மட்டும் கொண்ட ஹோண்டாவின் ஸ்போர்ட் நேக்ட் ட்ரேப்ஸாய்ட் வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எடை குறைவானது. பிஜிஎம் எப்.ஐ தொழில்நுட்பத்தில்  உருவாக்கப்பட்டிருக்கும் 286 சிசி டிஒஹெச்சி 4  வால்வ் லிக்விட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் என்ஜின், நவீன பிரேக்கிங்,  அனைத்தும் எல்சிடி லைட், எரிபொருள் சிக்கனம் உள்ளிட்டவை இதன் சிறப்பு அம்சங்கள்.  மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக் மற்றும் கேண்டி க்ரோமோஸ்பியர் ரெட் வண்ணங்களில் கிடைக்கிறது.

ஹோண்டாவின் சிகேடி தளத்தில் பெரிய பைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 3வது பைக். மேலும் சிபி300ஆர் 3 மாதங்களுக்கான முன்பதிவு  ஏற்கனவே முடிந்துவிட்டது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ₹2..41 லட்சம். சிபி300ஆர்-க்கான முன்பதிவு ஆரம்பித்து 25 நாட்களில், தற்போதுள்ள உற்பத்தி திட்டத்தின்கீழ் 3 மாதங்களுக்கு மேல் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது என ஹோண்டா மோட்டர்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மினொரு கேடோ, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்  பிரிவு மூத்த துணைத்தலைவர்  யத்விந்தர் சிங் குலேரியா  ஆகியோர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Introduction ,CB3 300R Bike Honda , Introduction,new CB3 300R,Bike,Honda
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...