×

டாஸ்மாக் ஊழியர் கோரிக்கைக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் படிப்படியான மதுவிலக்கு கொள்கைப்படி, மதுவிலக்கை அமல்படுத்தும் கால அட்டவணை வெளியிட வேண்டும். பணியில் உள்ள டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் போது உருவாகும் உபரிப் பணியாளர்களுக்கு அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில்  நிரந்தர மாற்றுப்பணி வழங்க வழிவகை செய்யும் அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரை சந்திக்க வரும்  19ம் தேதி சென்னையில் காத்திருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 16ம் தேதியில் முதல்வர் கவனத்திற்கு, கடிதம் எழுதியும், அவரது அலுவலகத்தில் இருந்து  எந்தத் தகவலும் கிடைக்காததால் போராடுவதைத் தவிர வழியில்லை என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாக தொழிற் சங்க தலைவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Taskmaker ,Muthrasan , tasmac,Muthrasan
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...