×

பார்சிலோனா அணிக்கு 16வது வெற்றி

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி தனது 24வது லீக் ஆட்டத்தில் ரியல் வல்லடோலிட் அணியுடன் மோதியது. இப்போட்டியில் பார்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி 43வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் கோல் அடித்தார்.

மற்றொரு பெனால்டி வாய்ப்பை அவர் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. பார்சிலோனா அணி 24 லீக் ஆட்டத்தில் 16 வெற்றி, 6 டிரா, 2 தோல்வியுடன் 54 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ரியல் மாட்ரிட் (48), அத்லெடிகோ மாட்ரிட் (47), செவில்லா (37) அடுத்த இடங்களில் உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Barcelona , Barcelona
× RELATED பாஜவின் வெற்றிவேல் யாத்திரை திருத்தணியில் 6ம் தேதி தொடக்கம்