×

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை....... கோஹ்லி தொடர்ந்து நம்பர் 1: குசால் பெரேரா 58 இடம் தாவினார்

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். தென் ஆப்ரிக்கா அணியுடன் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. டர்பன் டெஸ்டின் 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 153 ரன் விளாசி இலங்கை அணியின் வெற்றிக்கு உதவிய குசால் பெரேரா, ஒரேயடியாக 58 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 40வது ரேங்க் பெற்றுள்ளார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலிடத்தையும், செதேஷ்வர் புஜாரா 3வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான ரேங்க்கிங்கில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (ஆஸி.) 878 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து, 862),  தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா (849), வெர்னான் பிலேண்டர் (821) அடுத்த இடங்களில் உள்ளனர்.  இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (794 புள்ளி) 5வது இடத்தில் நீடிக்கிறார். அஷ்வின் ஒரு இடம் பின்தங்கி 10வது இடத்தில் உள்ளார். ஜஸ்பிரித் பூம்ரா 16வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 116 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா (110), நியூசிலாந்து (107) அடுத்த இடங்களில் உள்ளன. டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் (439) முன்னிலை வகிக்கிறார். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் (415), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (367) அடுத்த இடங்களில் உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICC ,Kohli ,Kusal Perera , ICC, Kohli, Perera,
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...