×

தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை பெங்களூருவில் நடக்க உள்ள விமான காட்சி செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணிப்பு

* முதல் முறையாக ரபேல் பங்கேற்கிறது

பெங்களூரு: புல்வாமாவில் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலை தொடர்ந்து,  பெங்களூருவில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சியை செயற்கைக்கோள் உதவியுடன்  கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பெங்களூருவில் நாளை மறுநாள் ஏரோ இந்தியா விமான கண்காட்சி மற்றும் சாகசம்  தொடங்குகிறது. 24ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் வெளிநாடுகளைச் சேர்ந்த  பல்வேறு நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளன. ரபேல் உள்ளிட்ட போர்  விமானங்கள் இதில் பங்கேற்பதால் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை விட  கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நான்கு அடுக்கு  பாதுகாப்பு வளையங்களை தாண்டிய பிறகுதான் பத்திரிகையாளர்களே விமான கண்காட்சி  நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியும். காஷ்மீரில் தீவிரவாதிகள்  நடத்திய கொடூர தாக்குதலின் காரணமாக பாதுகாப்பு கெடுபிடிகள் மேலும்  அதிகரிக்கப்பட்டுள்ளன.

விமானக் கண்காட்சி ஸ்டால்களை பார்வையிடுவதற்கு மட்டும்  இன்றி விமான சாகசத்தை காண வரும் பார்வையாளர்களின் ஆவணங்கள் பலமுறை  பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகம்  ஏற்படும் வகையில் யாராவது விமான சாகசம் நடைபெறும் பகுதிக்கு வெளியே  திரிந்துக் கொண்டிருந்தாலும் அவர்களை துல்லியமாக கண்காணிப்பதற்கு செயற்கைக்கோள்  உதவியுடன் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான சாகசம் நடைபெறும்  இடத்தை சுற்றிலும் டிரோன் கேமரா பறக்கக்கூடாது என ஏற்கனவே போலீசார் தடை  உத்தரவு பிறப்பித்துள்ளனர். அத்துடன் எலகங்கா முழுவதும் போலீசார் தங்கள்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : terrorists ,strike ,Bengaluru , Terrorists Attack, Surveillance, satellites, Bangalore
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...