×

கோடைக்காலத்தை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானல் ஓகேனக்கலுக்கு சுற்றுலா: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு

சென்னை: கோடைக்காலத்தை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானல், ஓகேனக்கல்லுக்கு 3 நாட்கள் சுற்றுலாவுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழக அரசின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வருடந்தோறும், சுற்றுலா பயணிகளின் தேவைக்கேற்ப, கோடைக்காலத்திற்காக சிறப்பு சுற்றுலாக்களை ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில் ஏற்பாடு செய்துள்ளது. 3 நாட்கள் சுற்றுலாவாக ஊட்டியில் தாவரவியல் பூங்கா, படகு சவாரி, ரோஜா தோட்டம் சுற்றி பார்க்கப்படும். தனி அறை மற்றும் பயண கட்டணம் ரூ.5200, இருவர் பகிரும் அறை ரூ.4500, சிறியவர் ரூ.4100 கட்டணமாகும். 3 நாட்கள் சுற்றுலாவாக கொடைக்கானலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூண் பாறை, பசுமை சமவெளி கண்டுகளித்தல், கோக்கர்ஸ் நடை படகு சவாரி, கொடைக்கானல் வரும் வழியில் வெள்ளிநீர் வீழ்ச்சி பார்க்கப்படும். கட்டணமாக(தனி அறை) ரூ.5250, இருவர் பகிறும் அறை ரூ.4500, சிறியவர் ரூ.4100 கட்டணமாகும். 3 நாட்கள் சுற்றுலாவாக ஏற்காடு- ஒகேனக்கல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜென் சீட், லேடீஸ் சீட், பகோடா பாய்ன்ட், ரோஜா தோட்டம், படகு சவாரி, ஒகேனக்கல்- நீர் வீழ்ச்சி பார்வையிடப்படும். கட்டணம் (தனி  அறை), ரூ.4750, இருவர் பகிரும் அறை ரூ.4250, சிறியவர் 3800 கட்டணமாகும். தனிக்குழுவாக 30 பேர் அதற்கும் மேல் சேரும் பட்சத்தில் அனைத்து நாட்களிலும் கோடைச் சுற்றுலா இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், 2, வாலாஜா சாலை, சென்னை -2., கட்டணமில்லா தொலைபேசி: 180042531111, தொலைபேசி: 044-25333333/ 25333444/ 25333850-54 இணையதள முன்பதிவு: www.ttdconline.com, மின்னஞ்சல்: ttdcsalescounter@gmial.com, இணையதள முகவரி:www.tamilnadutourism.org, கைபேசி முன்பதிவு: www.mttdonline.com தொடர்பு கொள்ளலாம்….

The post கோடைக்காலத்தை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானல் ஓகேனக்கலுக்கு சுற்றுலா: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Oothi ,Kodaikanal Ogenakal ,Tamil Nadu Tourism Development Corporation ,Chennai ,Oudi ,Kodaikanal ,Ogenakal ,Godaikanal Ohenakal ,
× RELATED புராதன சின்னங்களை விளக்கும் வகையில் ₹5...