×

மணத்தட்டை கல்பாலம் முதல் வாளாந்தூர் வரை ரயில் பாதையின் குறுக்கே பூமிக்கு அடியில் புதிய குகை வழிப்பாதை

* பாசனத்திற்கு தண்ணீர் செல்ல சிமெண்ட் சிலாப்புகளும் அமைப்பு

குளித்தலை : குளித்தலை அடுத்த மணத்தட்டை கல்பாலம் முதல் வாளாந்தூர் வரை ரயில் பாதையின் குறுக்கே பூமிக்கு அடியில் புதிய குகை வழிப்பாதையை ரயில்வே நிர்வாகம் அமைத்து வருகிறது. இதில் பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் சிமெண்ட் சிலாப்புகளும் அமைக்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் கடந்த ஆண்டு ஈரோட்டில் இருந்து திருச்சி ஜங்சன் வரை மின்சார ரயில் பாதையாக மாற்றி தற்போது அதில் அனைத்து விரைவு ரயில், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன.

மின்சார ரயில் பாதை அமைத்தவுடன் அதன் குறுக்கே உள்ளூர் வழியாக செல்லும் மின் கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு் பூமிக்கு அடியில் குழாய் மூலம் மின் வயர்களை கொண்டு சென்று ரயில்வே பாதையின் எதிர் திசையில் உள்ள மின் கம்பத்தில் இணைப்பு ஏற்படுத்தும் பணி நடைபெற்றது. அதன் பிறகு இரண்டாம் கட்டமாக ரயில்வே பாதையை கடந்து பல்வேறு சிறிய வடிகால் வாய்க்கால் மூலம் வயல்களுக்கு தண்ணீர் பாசனத்திற்க்கு செல்கிறது.

அதன் படி கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட் அருகே மணத்தட்டை கல்பாலம் முதல் வாளாந்தூர் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கு செல்லும் முக்கியமான சிறிய வடிவாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் செல்லும் வகையில் ரயில்வே நிர்வாகம் விவசாயிகளுக்காக ரயில் பாதையின் குறுக்கே பூமிக்கு அடியில் குகை வழி பாதை அமைத்து அதில் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல வசதியாக சிமெண்டாலான சிலாப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி விரைவில் முடிவடைந்ததும் இப்பகுதியில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : earth ,railway track ,Marpettai Kalpalam , government ,railway track ,Kulithalai. water way
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?