×

மீன் குழம்பு வாசம் ஊரெல்லாம் வீசும்... கண்மாயை கலக்கிய மீன்பிடி திருவிழா

* அயிரை, கெண்டையை ஆயிரக்கணக்கானோர் அள்ளினர்

மேலூர் :  விவசாயம் செழிக்க வேண்டி மேலூர் அருகே பெரிய கண்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.   மதுரை மாவட்டம், மேலூர் அருகே திருவாதவூரில் சோழப்பேரரி எனப்படும் பெரிய கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஊர் பெரியவர்கள் வெள்ளை துணியை கொடி போல அசைத்துக்காட்டி, மீன் பிடிக்க அனுமதித்தனர். சுற்றி திரண்டிருந்த  தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, ஊத்தா, கச்சா, சேலை என பலவற்றையும் தண்ணீரில் வீசி, கெழுத்தி, கெண்டை, அயிரை என பலவகையான மீன்களை பிடித்தனர். இதில் 2, 3 கிலோ எடையுள்ள மீன்களும் சிக்கின. ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி மீன்களை தேடியதால் ஒவ்வொருவருக்கும் மிக குறைவாகவே மீன்கள் கிடைத்தன. நேற்று திருவாதவூர் முழுவதும் அனைத்து வீடுகளிலும் மீன் குழம்பு வாசனை தூக்கலாக இருந்தது.

பணத்துக்கு தர மாட்டோம் ப்ரீயாத்தான் கொடுப்போம்

மீன்பிடி திருவிழாவிற்கு மேலூரை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து அதிகாலை முதலே டூவீலர், கார், வேன், டிராக்டர்களில் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். ஜல்லிக்கட்டிற்கு பிறகு அதிகளவு மக்கள் கூடும் இடமாக இந்த மீன்பிடி விழா விளங்கியது. . கண்மாயில் அதிகளவு மீன்களை பிடிப்பவர்கள் அதை யார் விலைக்கு கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இலவசமாகவே கொடுப்பார்கள். கண்மாயில் இப்படி பிடிக்கும் மீன்களை விலைக்கு விற்பனை செய்ய கூடாது என்பதை கிராம மக்கள் கடுமையாக கடைப்பிடித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fish Festival,melur,festival,Village
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி